Parole de la chanson Jeevane Jeevane par Ilaiyaraaja

Parole de la chanson Jeevane Jeevane par Ilaiyaraaja

ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ
கண்களில் உன் முகம் எந்தன் முன் தோன்றுதே
காலடி தேடியே பாதைகள் நீளுது
நான் ஓய்ந்திடாமல் தேடி வந்து உன்னை சேருவேன்
ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ?
கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ

தீபம் என சுழலும் விழி சுடரொளி
உனை காற்றினிலும் அனைய விட மாட்டேன்
உயிருக்குள்ளே உயிர் கலந்த உயிர் ஒளியே
உனை ஒருப்பொழுதும் வெளியில் விட மாட்டேன்
எனக்குள் உன்னை தூங்க வைத்து எனது மூச்சால் மூடுவேன்
இரவும் பகலும் விழித்து இருந்து உன்னை பார்த்தே வாழ்வேன்
நான் ஓய்ந்து ஓய்ந்து போகும் போதும் உன்னை தேடுவேன்
ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ?
கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ

கருவறையில் உறங்கும் ஒரு குழந்தை என
என் இதயத்திலே உனை சுமந்து வாழ்வேன்
கடவுள் வந்து எதிரில் நின்று கேட்டாலும்
நான் எனை தருவேன் உன்னை தர மாட்டேன்
காலம் நன்றே என்று ஆக உன்னை கண்டேன் கண்மணி
சோகம் இன்றே நின்று போக வந்து சேர்ந்தாய் கண்மணி
இது காதல் காலம் வாழ்த்தும் கீதம் எங்கும் கேட்குதே
தேவியே தேவியே தென்றல் தாலாட்ட
சோகமே தீர்ந்ததால் நெஞ்சில் தேன் ஊற
மயில்களின் இறகினால் உன் முகம் வருடுதே
காதலின் அமுதினை இதயத்தால் பருகுதே
அந்த காதல் தேவன் ஆணை என்று சொல்வதாரடி